Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Non salary months raised to 10 months-computer operaters

     திண்டுக்கல்:தமிழகத்தில், ௧௦ ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு கடந்த, 10 மாதமாக சம்பளம் வழங்காததால் உணவுக்கே பரிதவிக்கும் நிலை உள்ளது. 
தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு அரசு வழங்கும் நலத்திட்ட விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய பட்டப்படிப்புடன், ஓராண்டு கம்ப்யூட்டர் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அரசின் அடிப்படை விவரக் குறிப்பு எழுதுபவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

இவர்கள் தற்போது தாலுகா அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்வது, பட்டா, சிட்டா, அடங்கல் வழங்குவது, முதியோர் உதவித்தொகை, தேர்தல் சம்பந்தமான பணிகள் உட்பட அனைத்து அலுவலக பணிகளையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றனர்.
இவர்களுக்கு தொகுப்பூதியமாக, மாதம் 7,500 ரூபாய் வழங்கப்படுகிறது. கால முறை ஊதியம் வழங்காததால் அவர்கள் கடும் அதிருப்தியும், சிரமமும் அடைந்துள்ளனர். இவர்களின் வேலையும் நிரந்தரம் இல்லாமல் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.
வரும் செப்டம்பர் 2016 வரை இவர்களின் பணி ஒப்பந்த காலத்தை அரசு நீட்டித்துள்ளது. ஆனால் கடந்த, 2015 ஜூன் முதல் இம்மாதம் வரை, 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் உணவிற்கே வழியின்றி தவிக்கின்றனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை கம்ப்யூட்டர் உதவியாளர் சங்க செயலர் துளசிதாசன் கூறியதாவது: மாநில அளவில், 300க்கும் மேற்பட்டோர் கடந்த, 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களின் பணிநிரந்தரம் என்பது கானல் நீர் போல் ஆகிவிட்டது.
அரசு அறிவித்து நிறைவேற்றிய கிரைண்டர், மிக்சி, மின்விசிறி போன்றவை குறித்த பணிகளை நேரம், காலம் பார்க்காமல் செய்தோம். பல மணிநேரம் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படவே இல்லை. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive