""பிளஸ் 2, பட்டம், பொறியியல் என
பல்வகைத் தேர்வுகளிலும் மதிப்பெண்களைக்குவித்து தமிழகத்தில் உயர்
அதிகாரிகளாகப் பணியாற்ற நினைக்கும் பலர், அதைவிட கூடுதல் மதிப்பும்,
ஊதியமும் தரக்கூடிய மத்திய அரசுப் பணிகள் பற்றி நினைப்பதில்லை.
திறன்
வாய்ந்தவர்களுக்கு ராணுவத்தில் உயர் பதவிகள் எப்பொழுதும்
காத்திருக்கின்றன'' என்கிறார் ஓய்வு பெற்ற மத்திய தொலைத் தொடர்புத்துறை
இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள். அவர் மேலும் கூறியதாவது:
""ஒவ்வொரு ஆண்டும் +2 தேர்வில் Group 1 பாடப்பிரிவில்
(Biology, Physics, Chemistry, Maths) தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான
மாணவர்கள் 200 Cut off மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். அதிலும் 190 க்கு
மேல் Cut off எடுப்பவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் மிகமிகக் கடினமாக உழைத்து மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள் என்பதில்
எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அப்படிப்பட்ட மாணவர்கள் ராணுவத்தில் உயர் அதிகாரிகளாக
எளிதில் ஆக முடியும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இணையாகப் பதவி
உயர்வுகளையும் பெற முடியும். UPSC இரு வகையான தேர்வுகளை நடத்துகின்றது.
பிளஸ்-2 தகுதியின் அடிப்படையிலான National Defence Academy Examination
(NDA) என்ற தேர்வையும், பட்டப்படிப்பு தகுதி அடிப்படையில் Combined Defence
Services Examination (CDS), (For Indian Military Acadamy (IMA),
Officers Training School (OTS) போன்ற தேர்வுகளையும் நடத்துகிறது.
பொதுவாக, NDA-க்கு வயது வரம்பு 19 வரையிலும் CDS, OTS,
IMA- களுக்கு 24 வயது வரையிலும் இருக்கும். இத்தேர்வுகள் ஆண்டுக்கு
இருமுறை நடைபெறும்.
ராணுவத்தில் பொறியியல் படித்தவர்களும், மற்றவர்களும்
நேரடியாகச் சேருவதற்கும் வாய்ப்பு உண்டு. இளவயதில் ஆ.உக், முடித்தவர்கள்
நேரடியாக இராணுவ கல்விப் பிரிவில் (Army Education) சேரலாம். NCC இல்
சிறப்புச் சான்றிதழ்கள் பெற்றவர்களுக்கு ராணுவத்தில் பல்வேறு வேலைகளில்
முன்னுரிமை உண்டு.
Combined Defence Services தேர்வு என்பது Indian
Military Academy, Officers Training School போன்றவற்றுக்கு இளைஞர்களைத்
தேர்ந்தெடுக்கும் ஒருதேர்வு ஆகும். அதிலும் Officers Training School (OTS)
சேர பொது அறிவு, பொது ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களில் மட்டும் தேர்வு
எழுதினால் போதும். இதன் மூலம் Short Service Commission எனப்படும்
ஐந்தாண்டு வரை இராணுவத்தில் அதிகாரிகளாக இருக்கலாம். தகுதி,
திறமை,விருப்பம் இவற்றின் அடிப்படையில் ஐந்தாண்டுகளுக்கு மேலும்
இராணுவத்தில் பணியாற்றலாம். NDA, CDS தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள்
பின்னாளில் ராணுவத்தின் அனைத்து உயர் பதவிகளையும் அலங்கரிக்க முடியும்.
இதைத் தவிர இந்திய இராணுவத்தில் பல்வேறு வழிகளிலும்
நல்ல பதவிகளில் சேரலாம். அவற்றில் ஒன்று இந்திய விமானப்படையில் நேரடியாக
Commissioned officers BL Flying, Technical Ground பிரிவுகளில் சேரலாம்.
குறைந்த கால வேலை (Short Service Commission), நிரந்தர வேலை (Permanent
Service Commissions) என்ற இரண்டும் உண்டு. 20 லிருந்து 26 வயது வரை சேர
வாய்ப்புகள் உண்டு. பட்டப்படிப்பு, பட்டப்படிப்புடன் கூடிய பட்டயப்
படிப்பு, முதுகலை அல்லது பொறியியல் படித்தவர்கள் வேலையில் சேரலாம்.
பல்வேறு படிகள் (Allowances) கிடைக்கும் இவ்வேலைகளில்
கிடைக்கும் மாத ஊதியம் கிட்டத்தட்ட தள்.74,264 (Flying Branch), தள்.65,514
((Technical Branch) மற்றும் தள்.63,014 (Ground Duty Branch) என்ற அளவில்
இருக்கும்.
Flexible Complementing Scheme என்பது அறிவியல்
துறைகளில் உள்ள அறிவியல் வல்லுநர்களுக்கு (Scientists) பதவி உயர்வளிக்கும்
ஓர் அருமையான திட்டமாகும். இத்திட்டத்தின்படி ஒருவர் குரூப் -1 (Group A)
பதவியில் M.Sc or Ph.D தகுதியுடன் சேர்ந்தால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளில்
வேலை திறம்படபார்க்கும் பட்சத்தில் நாலைந்து பதவி உயர்வுகள் பெற முடியும்.
மேல்நிலைகளில் பதவிகள் காலியாக இருக்க வேண்டிய அவசியம்
இல்லை. ஒருவர் இருக்கும் அதே பதவியை மேல்நிலைக்கு உயர்த்திவிடுவார்கள்
(எ.கா : Scientist Grade A, Grade B, Grade C etc.,) தமிழக அரசுத் துறைத்
தலைவர் (Secretary to Government of Tamil Nadu) பதவிக்கு இணையான ஊதியம்
கிடைக்கக்கூடிய பதவிகள் வரை கண்டிப்பாக அடையலாம்.
அறிவியல் பாடங்களை மாசறக் கற்றவர்களும் பாடங்களில்
மிகுந்த ஆர்வமுள்ளவர்களும் முதுநிலை அல்லது ஆராய்ச்சி (M.Phil or Ph.D)
முடித்த உடன் குறைந்த ஊதியம் கிடைக்கும் தனியார் கல்வி நிலையங்களில் சேர
வேண்டாம். தனியார் கல்வி நிலையங்களில் குடும்பச் சூழ்நிலை காரணமாகச்
சேர்ந்தாலும் பின்பு அறிவியல் துறைகளில் அறிவியல் வல்லுநர்களாகச் சேர
முயற்சிக்க வேண்டும்.
(Defense Research Development Organization) ISRO,
Commission, ICMR, ICAR, CSIR போன்றவை அதிக அளவில் போட்டித் தேர்வுகளை
வைத்தே அறிவியல் வல்லுநர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
BE முடித்த உடனோ அல்லது எம்.எஸ்.சி. முடித்த உடனேயோ
இந்த நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ள
வேண்டும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முழுமையாகப் படித்தால் கண்டிப்பாக
வேலை கிடைக்கும். நாம் அதிகமாகத் தில்லி போன்ற வடமாநிலங்களில் வேலை
பார்த்தால் அது தேச ஒற்றுமைக்கு (National Integration) வழிவகுக்கும்.
ராணுவத்திலிருந்து அதிகாரிகளாக ஓய்வு பெறுபவர்களை
தனியார் நிறுவனங்களிலும் விரும்பிச் சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய
செயல் முடிக்கும் திறன், ஆளுமை, காலம் தவறாமை போன்ற குணங்கள் அவர்களுடைய
ஒய்வுக்குப் பின்பும் பணி கிடைப்பதை எளிதாக்குகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...