மாணவ, மாணவியர், தங்களின் பாட புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, பல
குறிப்புகளையும், தகவல்களையும் அறிந்து கொள்ள, கணினி வழி கற்பித்தல் முறை
முக்கியம்.
இதை உணர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ்
1, பிளஸ் 2பயிலும் மாணவ, மாணவியருக்கு, இலவச மடிக்கணினி
வழங்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து, 'அனைத்து வகுப்புகளிலும் படிக்கும் மாணவ,
மாணவியர் பயன்பெறும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க,
நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்,
ஆசிரியைகளின் வகுப்பறை கற்றல் மேம்படுத்தப்படும்.
அந்த விதத்தில், ஐ.சி.டி., பள்ளிகள் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.இத்திட்டத்தில், எல்லா வகுப்புகளுக்குமான பாட புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி, மைய கணினி மூலம் வகுப்பறைகளில் வழங்க வழி செய்யப்படும்.அனைத்து மாணவ, மாணவியர் பலன் அடையும் வகையில், சிறந்த ஆசிரியர்களின்விரிவுரைகளின் தொகுப்புகள், கல்வி செயற்கைக் கோள் வாயிலாக வகுப்பறைகளுக்கு சென்றடைய, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவித்தார்.இதில் சில பள்ளிகளில் மட்டும், மத்திய அரசு நிதிஉதவியுடன் சிலகணினிகள் வாங்கி போடப்பட்டு,மூடி வைக்கப்பட்டுள்ளன. பாடங்களை கணினி மூலம்கற்பித்தல், செயற்கைக்கோள் மூலம் வகுப்பு எடுத்தல்என்பதெல்லாம் இன்னும் நடைமுறைக்கு வராமல்கனவு திட்டங்களாகவே உள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...