Home »
» உயர்தரக் கல்வியுடன் நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருவது அவசியம்: முன்னாள் பள்ளி கல்வித்துறை இயக்குனர்
மாணவர்களுக்கு உயர்தரக் கல்வி போதிக்கும் பணியுடன்,நல்லொழுக்கத்தைக் கற்றுத் தரும் பொறுப்பும்,கடமையும் ஆசிரியர்களுக்கு உண்டு என்று முன்னாள் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கே.மாரியப்பன் கூறினார்.
தாம்பரத்தை அடுத்த படப்பை ஆல்வின் சர்வதேசப்பள்ளி ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியதுபெற்றோர்கள் தாங்கள் பெறாத வாய்ப்பையும்,வசதியையும்,படிப்பையும் தங்கள் பிள்ளைகள் பெற வேண்டும் என்பதற்காக தரமான கல்வி வழங்கும் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அத்துடன் தங்களது பெரும் பொறுப்பு நிறைவடைந்து விட்டதாக பெரும்பாலான பெற்றோர் கருதுகிறார்கள். ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த உறுதுணை புரிவதுடன் அவர்களது பணி நிறைவடைந்து விடவில்லை. கல்வியுடன் நல்லொழுக்கங்களையும்,நற்பண்புகளையும் கற்றுத் தந்து,மகாத்மா காந்தி,விவேகானந்தர்,அப்துல் கலாம் போன்ற மாமனிதர்களாக அவர்களை உருவாக்கும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு.அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் உறுதுணையாகத் திகழ வேண்டும்.உண்மை,நேர்மை ஆகிய நற்பண்புகளை மாணவர்கள் மனதில் விதைத்து சிறந்த மனிதனாக உருவாக்க வேண்டும்.அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று விட்டால் மட்டும் வாழ்க்கையில் உயர்பதவி,உயர்நிலையைப் பெற்று விட முடியாது.பெற்ற உயர் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு நல்ல ஒழுக்கமும்,நற்பண்புகளும் அவசியம் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...