அக்பர் ஒரு முறை அவையினரை நோக்கி, ‘‘அறிஞர்
பெருமக்களே! நான் பெரியவனா? கடவுள் பெரியவரா? என்ற வினா என் மனதில்
எழுந்துள்ளது. இதற்குத் தக்க பதில் சொல்லுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.
‘அக்பரை விடக் கடவுளே பெரியவர்!’ என்பதைச் சொல்லத் தேவை இல்லை. ஆனால்,
‘எங்கே அரசர் கோபித்துக் கொள்வாரோ?’ என்றெண்ணி பலரும் மௌனம் காத்தார்கள்.
மதிநுட்பம் வாய்ந்த பீர்பால் எழுந்து நின்றார். ‘‘மன்னர் பெருமானே... இந்த
விஷயத்தில் சந்தேகத்துக்கே இடமில்லை! கடவுளை விடத் தாங்கள்தான் பெரியவர்’’
என்றார்.
அக்பர் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. ‘‘மதியூகியாகிய பீர்பாலே! உமது கூற்றை எல்லோருக்கும் புரியுமாறு விளக்கும்’’ என்றார். ‘‘சக்ரவர்த்தி அவர்களே! என்னைத் தங்களுக்குப் பிடிக்கவில்லையானால், உடனே நாடு கடத்தி விடத் தங்களால் இயலும். ஆனால், கடவுளுக்கு என்னைப் பிடிக்காவிட்டால், அப்படி நாடு கடத்த இயலாது’’ என்றார். ‘‘எப்படி?’’ என வினவினார் அக்பர். ‘‘உங்கள் ஆட்சி எல்லை மிகவும் குறுகியது. அதனால் உங்களுக்குப் பிடிக்காதவனை அடுத்த நாட்டுக்கு விரட்டியடித்து விடலாம். ஆனால், கடவுளின் ஆளுகையோ பூமியில் மட்டும் இன்றி, அண்ட சராசரங்களிலும் இருக்கிறது. ஆகவே, அவர் எவ்வாறு ஒருவனை நாடு கடத்த முடியும்? கடவுள் ஒருவனை எங்கே விரட்டினாலும், கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில்தானே சுற்றிக் கொண்டிருக்க முடியும்!’’ என்றார் பீர்பால். பீர்பாலின் மதிநுட்பத்தை வியந்து, ஏராளமான பரிசுகள் வழங்கிப் பாராட்டினார் அக்பர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...