வரும் மார்ச் 24 ஆம் தேதி முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருவதால், பண பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரும் மார்ச் 24 ஹோலி பண்டிகை, மார்ச் 25 புனித வெள்ளி, மார்ச் 26 சனிக்கிழமை விடுமுறை, மார்ச் 27 ஞாயிற்றுகிழமையும் சேர்த்து வங்கிகளுக்கு நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு
நாள் தொடர் விடுமுறையால் வர்த்தக பணபரிமாற்றம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும் நாட்டில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், பொதுமக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏறக்குறைய அனைத்து வங்கிகளும், ஏடி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் ஏஜென்சிகள் மூலமாக செய்து வந்தாலும், தொடர் விடுமுறையால், பணம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், ஏ.டி.எம் சேவை முடங்கும் என கருதப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...