Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜே.இ.இ., தேர்வு 'ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியீடு.

           இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஒருங்கிணைந்த பொது நுழைவு தேர்வான ஜே.இ.இ., தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
 
       தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் படிப்புகளில் சேர்வதற்குஅகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வானது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் (சி.பி.எஸ்.இ.) சார்பில் முதல் நிலைத் தேர்வும், முதன்மைத் தேர்வும் நடத்தப்படுகிறது.


முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்றவற்றில் சேரலாம். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றால் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.2016-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வு அறிவிப்பைநவம்பர் இறுதியில் வெளியிடப்பட்டது.

கடந்த ஜனவரி 11 வரைவிண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.ஜே.இ.இ. முதன்மை தேர்வு, தாள் 1 மற்றும் தாள் 2 ஏப்ரல் 3ம் தேதி நடக்க உள்ளது. அதற்கான, 'ஹால் டிக்கெட்' நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும், 'பாஸ்வேர்ட்' மூலம் கீழ்கண்ட இணையதள லிங்கை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்http://jeemain.nic.in/jeemainapp/admitcard/AuthForAdmitCardDwd.aspx. ஆன்லைன் தேர்வு ஏப்ரல் 9 மற்றும் ஏப்ரல் 10ம் தேதி நடக்க உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive