பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று நடந்த உயிரியல் தேர்வில், விலங்கியல்
பிரிவு வினாத்தாளில், புதிய வினாக்கள் இடம் பெற்றதால், மாணவர்கள் பதில்
எழுத திணறினர்;
தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது. பிளஸ் 2 பொதுத்
தேர்வில், நேற்று உயிரியல் தேர்வு நடந்தது. தாவரவியல் மற்றும் விலங்கியல்
பாடங்களுக்கு தலா, 75 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது.
உயிரி - விலங்கியல் வினாத்தாளில், பல புதிய வினாக்கள் இடம் பெற்றன. ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன.மூன்று மதிப்பெண்ணில், இரண்டு புதிய வினாக்கள், மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையில் இருந்தன. ஐந்து மற்றும், 10 மதிப்பெண் வினாக்களும், மாணவர்கள் எதிர்பாராத வகையில், சற்று வித்தியாசமானதாகவே இடம்பெற்றன. 'சென்டம்' எண்ணிக்கை குறையும் வகையில், இந்த வினாத்தாள் இருந்தது.
தரமான வினாத்தாள்:வினாத்தாள் தரமாக இருந்தது. அனைத்து வினாக்களும், பாடத்திட்டப்படி,'புளூ பிரின்ட்' படியே அமைந்து இருந்தன. சில வினாக்கள் புதியவையாக இருந்தாலும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம்பாதிக்காது. பி.இளங்கோவன், விலங்கியல் ஆசிரியர்,எம்.சி.டி.முத்தையா செட்டியார் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், சென்னை.
தாவரவியல் எளிமை:உயிரி - தாவரவியல் தேர்வில், வினாக்கள் எளிமையாகவே இருந்தன. ஒரு மதிப்பெண்ணில், ஒரு வினா மட்டும், மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. எனினும், அனைத்து தரப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில், வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
எளிமையான கேள்விகள்:பெரும்பாலான கேள்விகள் எளிமை யாகவேஇருந்தன. பள்ளியில் கற்று கொடுத்த வினாக்களே தேர்வில் இடம் பெற்றதால், தாவரவியலில் அதிக மதிப்பெண் பெற முடியும்.
ஆர்.சவுந்திரபாண்டியன், தாவரவியல் ஆசிரியர், எம்.சி.டி., முத்தையா செட்டியார் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...