பிளஸ் 2 ஆங்கில முதல்தாள் தேர்வில் சென்டம் எடுப்பது கடினம் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பிளள் 2 தேர்வு கடந்த 4ம் தேதி முதல் நடக்கிறது. உடுமலையில், 15மையங்களில்,
3,963 மாணவர்கள் மற்றும் 364 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
நேற்று ஆங்கில முதல்தாள் தேர்வு நடந்தது. இத்தேர்வில், 47 மாணவர்கள்
மற்றும் 37தனித்தேர்வர்கள் &'ஆப்சென்ட்&' ஆகினர்.
திருமலைச்சாமி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை.
ஆங்கில முதல்தாள் தேர்வு எளிமையாகவே இருந்தது. கடந்த தேர்வுகளில்
கேட்கப்பட்ட வினாக்களே இத்தேர்விலும் கேட்கப்பட்டதால், சுலபமாக விடை எழுத
முடிந்தது.
கமலேஷ், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதோடு, அதிக மதிப்பெண் எடுப்பதற்கான
நடுநிலையான வினாத்தாளாகவே இருந்தது. இலக்கணப் பகுதி வினாக்கள் யோசித்து
விடை எழுத வேண்டியதாக இருந்தது.
பவித்ரா, பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி.
பாடங்களை படிப்பதோடு, இலக்கணப்பகுதிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து
படித்ததால், அனைத்து வினாக்களுக்கும் சுலபமாக விடையளிக்க முடிந்தது.
எதிர்பார்த்த வினாக்களே வந்ததால்,நம்பிக்கையோடு விடை எழுதினேன்.
சந்தியா, பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி.
ஆங்கிலம் முதல்தாள் தேர்வில், இலக்கணப்பகுதியில் இரண்டு மதிப்பெண்களில்
மூன்று வினாக்கள் குழப்பமாகவே இருந்தன. வினாக்களை நன்றாக புரிந்து கொண்டு
விடை எழுத வேண்டியிருந்தது. பொதுவாக, எளிமையான வினாத்தாளாகவே இருந்தது.
ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதிய வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கருத்து:
மகாலட்சுமி: பிளஸ் 2 பொதுத்தேர்வை பொருத்தவரை, இது வரை எழுதிய மூன்று தேர்வுகளும் மிகவும் ஈசியாக இருந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...