இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து இ.பி.எப். வட்டிக்கு வரிவிதிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று வெளியிட்டுள்ளார்.
முன்னதாக 'தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தர். இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்மீது வரி விதிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். குறிப்பாக, இந்த வரி விதிப்பு யோசனையை இப்போதைக்கு தள்ளிப்போடுமாறு அவர் அருண் ஜெட்லியிடம் கூறியதாக தகவல் வெளியானது.இதையடுத்து ம் இ.பி.எப். மீது வரி விதிக்கும் முடிவை தற்போதைக்கு ஒத்திவைத்து இந்த ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...