மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் பாடம் நடத்தாமல் ஓய்வறையில்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்ட்
செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள பெமினா பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று பள்ளிக்கல்வி இயக்குனர் பாசல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னறிவிப்பு எதுவும் இன்றி பள்ளிக்குள் நுழைந்த அவர், வகுப்பறைக்கு சென்றபோது மாணவர்கள் மட்டும் இருந்தனர். ஆசிரியர்களைக் காணவில்லை. அனைவரும் ஓய்வறையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். இதனால் பள்ளியில் பணியாற்றும் 18 ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதுபற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் பாசல் கூறுகையில், “இந்த பள்ளியில் 110 குழந்தைகள் படிக்கின்றன. 18 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாணவர்களின் கல்வித்தரம் உயரவில்லை. 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய கணக்கைக் கூட போடத் தெரியவில்லை. 25ஐ நான்கால் வகுப்பது போன்ற அடிப்படை கணிதக் கேள்விகளைக் கூட எழுதத் தெரியவில்லை. அந்த கணக்குகளுக்கு தீர்வு காண்பது குறித்து சொல்லவும் தெரியவில்லை.
இதனால் 18 ஆசிரியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்னர். மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்தபிறகே மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். அது வரையில் அந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...