விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பங்குனி உத்திர
விழாவுக்கான உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி,
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் த. பாபுசெல்வன்
வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முழுமையாக நிறைவடையாத நிலையில், மொழிப்பாடவிடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இதனால், பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதில் சிரமம் ஏற்படும். எனவே, பிளஸ் 2 தேர்வுகள் அனைத்தும் முடிந்த பிறகே விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க வேண்டும். பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்துக்கு இம்மாதம் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அன்றைய தினம் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம், அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...