நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்தார்.
பாட்னா உயர் நீதிமன்றத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது:
ஒவ்வொரு நீதிமன்றமும் ஆண்டு இறுதியில் அதிக நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட வேண்டும். சில வழக்குகள் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானவை. இது மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் வழக்குகளை விரைவில் தீர்ப்பதற்கு நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த முன்வர வேண்டும்.
கடந்த 100 ஆண்டுகளில் பாட்னா நீதிமன்றத்தால் செயல்படுத்தப்பட்ட நல்ல விஷயங்களை அடுத்த நூறு ஆண்டுகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றார் மோடி.
இந்த நிகழ்ச்சியில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், மத்திய சட்டத்துறை அமைச்சர் டி.வி.சதானந்த கௌட, பிகார் ஆளுநர் ராம் நாத் கோவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...