தேர்தல் வாக்குப் பதிவுக்காக வார நாள்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறது என
தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபலாசுவாமி
விளக்கம் அளித்தார்.
ஊடகங்களும் தேர்தலும் என்ற தலைப்பில் சென்னை
பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்ற (மார்ச் 12) நடைபெற்ற விவாதத்தில் கலந்து
கொண்டு கோபாலசுவாமி பேசியதாவது:
வார இறுதி நாள்களில் தேர்தல் நடத்தினால், மக்கள் விடுமுறையை கொண்டாட சென்றுவிடுகின்றனர். அதனாலேயே, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தேர்தல் நடத்துவதில்லை. தேர்தல் தேதியை நிர்ணயிக்கும் முன்பு பல்வேறு காரணிகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்கிறது. மாநில விடுமுறைகள், உள்ளூர் விடுமுறைகள், பள்ளி, கல்லூரி தேர்வுகள், மத சம்பந்தமான முக்கியமான விழாக்கள், வானிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னரே தேர்தல் தேதியை முடிவு செய்கின்றனர். தேர்தலில் நகரங்களைவிட கிராமங்களிலேயே அதிக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேலும், மக்களவைத் தேர்தல்களைவிட, மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களிலேயே அதிக அளவு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.முன்னாள் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் பணியாற்றிய போது ஒரு வாக்குச் சாவடியில், 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாயிருந்தால், அங்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டார்.இதையறிந்த அரசில் கட்சிகள், வாக்குச் சாவடியை கைப்பற்றும் நிலையில், அங்கு வாக்குப் பதிவு 90 சதவீதத்தை தாண்டாமல் பார்த்துக் கொண்டனர். அதன்பின்னர் தொகுதியில் பதிவான சராசரி வாக்குப் பதிவைவிட குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் கூடுதலாக 10 சதவீதத்துக்கும் மேல் வாக்குப் பதிவு இருந்தால் அங்கு மறுவாக்குப் பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது. இதுதவிர வாக்குச் சாவடியை கைப்பற்றுவதை கண்டறிய தேர்தல் ஆணையம் பல்வேறு உத்திகளை கையாளுகிறது. உதாரணமாக பிகாரில் நடைபெற்ற தேர்தலின் போது, ஒரு வாக்குச் சாவடியில், வேட்பாளர் பட்டியலிலில் இருந்த 800 பேர் தொடர்ந்து வாக்களித்ததாக பதிவுகள் இருந்தது. ஒரு ஊரே ஒட்டுமொத்தமாக வந்து வாக்களிப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், அங்கு மறு தேர்தல் நடத்தப்பட்டது என்றார்.

வார இறுதி நாள்களில் தேர்தல் நடத்தினால், மக்கள் விடுமுறையை கொண்டாட சென்றுவிடுகின்றனர்,என்று கூறுவது அபத்தம்.யார் கையில்காசு இருக்கிறது கொண்டாடுவதற்க்கு?
ReplyDeleteவார இறுதி நாள்களில் தேர்தல் நடத்தினால், மக்கள் விடுமுறையை கொண்டாட சென்றுவிடுகின்றனர்,என்று கூறுவது அபத்தம்.யார் கையில்காசு இருக்கிறது கொண்டாடுவதற்க்கு?
ReplyDelete