திருமணம் ஆகாத பட்டதாரிகளுக்கு, கேரளாவில் உள்ள
இந்திய நேவல் அகாடமியில் பயிற்சி அளித்து, ‘லெப்டினன்ட்’ உட்பட பல்வேறு
பணி வாய்ப்புகளை வழங்குகிறது இந்திய கடற்படை!
பணிப்பிரிவுகள்: லாஜிஸ்டிக்ஸ் பிரிவு (ஆண்கள் மட்டும்) மற்றும் எஜூகேஷன் பிரிவு (இருபாலரும்).
வயது வரம்பு: எஜூகேஷன் பிரிவு பணியிடங்களுக்கு ஜனவரி 2, 1992ல் இருந்து ஜனவரி 1, 1996க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக வேண்டும். லாஜிஸ்டிக்ஸ் பிரிவு பணியிடங்களுக்கு, ஜனவரி 2, 1992ல் இருந்து ஜூலை 2, 1998க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக வேண்டும்.
கல்வித்தகுதி: எஜூகேஷன் பிரிவு பணியிடங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை முதன்மை பாடமாக பயின்றிருக்க வேண்டும் அல்லது எம்.சி.ஏ., எம்.ஏ.,(பொருளாதாரம், வரலாறு, அரசியல், ஆங்கிலம்) போன்ற பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறையில், மெக்கானிக்கல், கம்ப்பியூட்டர் சயின்ஸ் எலட்ரிக்கல் மற்றும் டெக்னாலஜி போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ.,பி.டெக்., அல்லது எம்.டெக்., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
லாஜிஸ்டிக்ஸ் பிரிவு பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., எம்.பி.ஏ., அல்லது எம்.சி.ஏ., அல்லது பி.காம்., பி.எஸ்சி., எம்.எஸ்சி(ஐ.டி.,) போன்ற பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.காம்., பி.எஸ்சி., படித்தவர்கள் உரிய துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு படித்திருப்பதும் அவசியம்.
தேர்வு முறை: பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில், சர்வீஸ் செலக்ஷன் போர்டு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு: நேர்முகத் தேர்வு இரண்டு நிலைகளை கொண்டது.
நிலை 1: ஒரு நாள் நடைபெறும் முதல் நிலைத் தேர்வில், நுண்ணறிவு சோதனைத் தேர்வு, பட புலனுணர்வு மற்றும் கலந்துரையாடல் தேர்வு ஆகியவை இடம்பெறும்.
நிலை 2: நான்கு நாட்கள் நடைபெறும் இரண்டாம் தேர்வு நிலையில், உளவியல் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை இடம் பெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 9
மேலும் விவரங்களுக்கு: www.joinindiannavy.gov.in
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...