ஆசிரியர் பயிற்சி மையங்களில், காலியாக உள்ள, 222 விரிவுரையாளர் பணி தேர்வுக்கான பாடத் திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ், மாவட்டந்தோறும், 'டயட்' எனப்படும், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில், பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சிபடிப்பும் நடத்தப்படுகின்றன.
'இங்கு, காலியாக உள்ள, 222 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்படும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், வரலாறு, புவியியல், உடற்கல்வியியல் மற்றும்தெலுங்கு ஆகிய பாடங்களில், விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இது குறித்த விரிவான அறிவிக்கைஏப்ரலில் வெளியிடப்படும். இதற்கிடையில், தேர்வுக்கான பாடத் திட்டத்தை, http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் டி.ஆர்.பி., வெளியிட்டுள்ள
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...