தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால்,
அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடக்கும் விழாக்களுக்கு, அரசியல்
கட்சியினரை அழைக்க, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல், மே 16ம் தேதி
நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் 4ம் தேதி வெளியிடப்பட்டது.
அன்று முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.எனவே, அரசு பள்ளி
மற்றும் கல்லுாரிகளில் நடைபெறும் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா
போன்றவற்றுக்கு, அரசியல் கட்சியினரை அழைக்கக்கூடாது என, தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டு உள்ளது.அரசு கல்லுாரிகளில், பட்டமளிப்பு விழாவில், மாணவ,
மாணவியருக்கு, கல்லுாரி முதல்வரே, பட்டங்களை வழங்கலாம் என,
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்ப்பிணிகளுக்கு விலக்கு:சட்டசபை தேர்தல்
பணியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில்
உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு, தேர்தல்
பணியில் இருந்து விலக்கு அளிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உத்தரவு
பிறப்பித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...