தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறார்
அமைப்புகள் மற்றும் சங்கங்கள் இணைந்து, 'பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள்
இயக்கங்களின் கூட்டமைப்பு' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில், தேர்தல்
கோரிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து
கூட்டமைப்பினர் கூறியதாவது:நாங்கள் சிறுவர்கள்; எங்களுக்கு ஓட்டுரிமை
கிடையாது. இருப்பினும், எங்களுக்கான கோரிக்கைகள், நான்கு தலைப்புகளில்
தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, செயல்படுவதாக
கூறும் கட்சிக்கு எங்கள் பெற்றோர், உறவினர்களை ஓட்டுபோட வலியுறுத்துவோம்.
இது தொடர்பாக, அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திக்க உள்ளோம். இவ்வாறு
தெரிவித்தனர்.
கோரிக்கைகள் என்ன?
பாரம்பரிய உணவுகள் குறித்த தகவல்களை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்
மதுக்கடைகளை அகற்ற வேண்டும்
காலாண்டுக்கு ஒரு முறை, பள்ளிகளில், மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும்
பள்ளிக் குழந்தைகளுக்கான சிறப்பு பஸ், பள்ளி நேரத்தில் அதிக பஸ்கள் இயக்க வேண்டும்
பள்ளி வளாகம், வகுப்பறைகளில் தண்டனைக்கு தடை செய்ய வேண்டும்
சட்டசபை கூட்டத்தொடரில் ஒரு நாள், குழந்தைகள் பிரச்னை குறித்து பேச வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...