பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேர அட்டவணையை தவறாமல் பின்பற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
. பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும், 4ல் துவங்குகிறது. விதிமுறையை தவறாமல் பின்பற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை மூலம் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை, 9:45க்கு துவங்கி, மதியம், 1:15க்கு தேர்வு முடிவடைய வேண்டும். காலை, 9:45க்கு, முதல் மணி அடிக்கும். தேர்வறை கண்காணிப்பாளர், தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை சரிபார்த்து, வரிசையாக அனுமதிக்க வேண்டும். 9:50க்கு, விதிமுறையை விளக்க வேண்டும். 9:55க்கு, இரண்டாவது மணி ஒலித்தபின், சீல் வைக்கப்பட்ட வினாத்தாள் உறை, இரண்டு மாணவர்களிடம் காட்டப்பட்டு, அவர்களிடம் கையெழுத்து பெற்றதும், கட்டு பிரிக்க வேண்டும். 10:00க்கு, மூன்றாவது மணி ஒலித்தவுடன், வினாத்தாள் வழங்க வேண்டும்.
பத்து நிமிடங்கள், வினாத்தாளை வாசித்து பார்க்க அனுமதிக்கப்படுகிறது. அடுத்து, 10:10க்கு நான்காவது மணி ஒலித்தவுடன், மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்கப்படும். முகப்பு சீட்டில் உள்ள தங்களது புகைப்படம், பெயர், விவரங்களை சரிபார்த்து மாணவர்கள், அதில், கையெழுத்திட வேண்டும். அதற்காக ஐந்து நிமிடம் ஒதுக்கப்படும். அதன்பின், 10:15க்கு ஐந்தாவது மணி அடித்தவுடன், விடை எழுத அனுமதிக்கப்படுவர். மதியம், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு எழுதலாம்.
ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கு ஒருமுறை, மணி ஒலிக்கப்படும்; தேர்வு நேரம் முடிவதற்கு, ஐந்து நிமிடம் முன், 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்க விடப்படும். 1:15 மணிக்கு தேர்வு நேரம் முடிவடைந்த பின், மாணவ, மாணவியரிடம் உடனடியாக விடைத்தாள் பெறப்படும். விதிமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...