Home »
» வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டீர்களா? அப்படியென்றால் நீங்கள் செய்யக்கூடாதவை.
|
|
நாம்
சாப்பிட்டு முடித்த பிறகு செய்யக்கூடாத சில செயல்களை செய்வதால், உணவு
செரிமான பிரச்சனைகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம்.எனவே, வயிறு நிரம்ப சாப்பிட்டுவீர்கள் என்றால் நீங்கள் தவிர்க்க வேண்டியவைகள்,
தூங்குவது
வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் தூங்குவது என்பது கேடு விளைவிக்கும்.
எப்படியெனில் உணவை உட்கொண்ட உடனேயே தூங்கி எழுவதனால், உண்ட உணவு
செரிக்காமல் அப்படியே வயிற்றில் இருக்கும்.
இப்படி உணவு செரிக்காமல் அப்படியே இருந்தால், அதனால் வயிறு உப்புசத்தை உணரக்கூடும்.
குளியல்
நீங்கள் குளிக்க நினைத்தால், உணவு உண்பதற்கு முன்பே குளித்து விடுங்கள்.
உணவை உண்ட பின் குளிப்பதால், செரிமான செயல்பாடு தாமதப்படுத்தப்படும்.
மேலும் வயிற்றைச் சுற்றிக் கொண்டிருக்கும் இரத்தம் செரிமானத்திற்கு
உதவாமல், உடலின் இதர பகுதிகளுக்கு பாய ஆரம்பிக்கும்.
பழங்கள் சாப்பிடுவது
பழங்கள் சாப்பிடுவது எப்போதும் உணவு உண்பதற்கு முன் தான் பழங்களை
சாப்பிட வேண்டும். அதுவும் 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். இப்படி
செய்தால் தான் பழங்கள் எளிதில் செரிமானமாகும்.
உணவு உட்கொண்ட உடனேயே பழங்களை உட்கொண்டால், பழங்கள் எளிதில்
செரிமானமாகாமல் அப்படியே தங்கிவிடும். எனவே உணவு உண்ட பின் பழங்களை
உட்கொள்ள நினைத்தால், உணவு உண்டு 2 மணிநேரம் கழித்து சாப்பிடுங்கள்.
டீ குடிப்பது
சிலர் வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின், உண்ட உணவு சீக்கிரம் செரிமானமாவதற்கு டீ குடிப்பார்கள்.
ஆனால் அப்படி டீ குடித்தால், டீயானது செரிமானத்திற்கு இடையூறை
ஏற்படுத்தும். மேலும் உணவு உட்கொண்ட பின் டீ குடிப்பதனால், உடல்
இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும். எனவே இப்பழக்கத்தையும்
கைவிடுங்கள். |
good
ReplyDelete