Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க'வாட்ஸ் ஆப்' மொபைல் எண் அறிவிப்பு

       தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 'வாட்ஸ் ஆப்' மொபைல் போன் எண் மற்றும் 'மொபைல் ஆப்ஸ்' அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
         இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில், தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க, வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை,
பொதுமக்கள் அறிந்து கொள்ள, கட்டணமில்லா டெலிபோன் எண், 1950 அறிவிக்கப்பட்டு உள்ளது.நடவடிக்கைஇந்த எண்ணில், நேற்று முன்தினம் மாலை வரை, 310 புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றுள்ளன. மேலும், பொதுமக்கள் வசதிக்காக, 'வாட்ஸ் ஆப் எண்' 94441 - 23456 அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த எண், 'வாட்ஸ் ஆப்' தகவலுக்காக உருவாக்கப்பட்டு உள்ளது.

மேலும், தேர்தல் கமிஷன் இணையதளம் (www.tn.elections.gov.in) மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். இதுதவிர, ceo@tn.gov.in என்ற இ - மெயில் முகவரிக்கும், புகார்களை அனுப்பலாம்.
பொதுமக்கள் அனுப்பும் புகார்கள் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றின் விவரம், இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதுதவிர, வாக்காளர்கள் நலன் கருதி, ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தக்கூடிய புதிய, 'மொபைல் ஆப்ஸ்' உருவாக்கப்பட்டு உள்ளது. இதை பெற விரும்புவோர், கூகுள் பிளே ஸ்டோரில் சென்று, TN elections என்ற, 'ஆப்சை' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
'மொபைல் ஆப்சில்'இதன்மூலம், வாக்காளர்கள் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம். இந்த, 'மொபைல் ஆப்சில்' பத்திரிகைகளுக்கு அனுப்பப்படும் செய்திக் குறிப்புகளும் வெளியிடப்படும். ஆப்பிள் மொபைலில் பயன்படுத்தக்கூடிய, 'மொபைல் ஆப்ஸ்' விரைவில் வெளியிடப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive