நேர்காணலுக்கு வரத்தவறும் அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றை
அனுப்பத் தவறும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல்
நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு சார்பில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக்
கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப
ஒய்வூதியர்கள் ஏப்ரல் முதல் தேதி முதல் ஜூன் மாதம் வரை வேலை நாள்களில்
கருவூலத்தில் நேரடியாக ஆஜராகிநேர்காணலைப் பதிவு செய்ய வேண்டும்.
நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச் சான்று பெற்றுக் கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும்.அதன்படி, நேரில் வருவோர், ஓய்வூதியப் புத்தகம் மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும். மேலும், இதுவரை ஆதார் அட்டை, வருமானவரிக் கணக்கு எண், குடும்ப அடையாள அட்டையைச் சமர்ப்பிக்காதவர்கள் மேற்படி ஆவணங்களின் நகலுடன் தங்களின் ஓய்வூதியக் கொடுவை ஆணை எண்ணைக் குறிப்பிட்டுச் சமர்ப்பிக்க வேண்டும்.நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு எண் ஆகியவற்றையும், ஆதார் அட்டை, வருமானவரிக் கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகலுடன் வாழ்வுச் சான்றையும் உரிய படிவத்தில் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்கு அனுப்பவேண்டும்.
வாழ்வுச் சான்றுப் படிவத்தை (www.tn.gov.inkaruvoolam) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அத்தகைய வாழ்வுச் சான்றுப் படிவத்தினை ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்பவேண்டும். அனைத்து நகல்களிலும் ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியக் கொடுவை ஆணை எண்ணைக் குறிப்பிட்டு ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர் என்றால், வெளிநாட்டிலுள்ள மாஜிஸ்திரேட், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச் சான்று பெற்றுசம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணைக் கருவூலத்தில் பதிவு செய்ய jeevan praman என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். ஓய்வூதியரின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு, ஓய்வூதியர் தங்களது வாழ்வுச் சான்றை இணையதளம் மூலமாகவே பதிவு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வாழும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களும் ஆதார் எண்ணைப் பெற்று jeevan praman portel-இல் பதிவு செய்திருந்தால் வாழ்வுச் சான்றை இணைய தளம் மூலமாகவேப் பெற்றுக்கொள்ளலாம்.ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரத்தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றை அனுப்பத் தவறினாலோ, அவர்களுக்கான ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளின் மூலமாக ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல்துறை, தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...