Home »
» உலகின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பாலஸ்தீனிய ஆசிரியை.
பாலஸ்தீனிய நாட்டில் உள்ள அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வந்த பெண்
ஒருவர் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போப்
பிரான்சிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் ஹானன் அல் ஹுருப் பெத்தலேகம் அகதிகள் முகாமில்
அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.குறிப்பாக, வன்முறையால்
பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருக்கும் குழந்தைகளுக்கு அவர் பாடம் எடுத்து
வருகிறார்.
துபாயில் நேற்று நடந்த ‘உலகின் சிறந்த ஆசிரியரை’ தெரிவு செய்யும்
நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியிட்ட உலக ஆசிரியர்களை வெற்றி பெற்று இந்த
விருதினை தட்டிச் சென்றுள்ளார்.
விருதினை பெற்ற ஆசிரியை ஹனான் பேசியபோது, ’உலகின் தலைச்சிறந்த ஆசிரியராக
தெரிவு செய்யப்பட்டு இந்த மேடையில் ஒரு பாலஸ்த்தீனிய பெண் ஆசிரியராக
நிற்பதற்காக நான் மிகவும் பெருமை படுகிறேன்.
எனக்கு கிடைத்துள்ள இந்த பரிசு தொகையை பயன்படுத்தி அகதி மாணவர்களின்
முன்னேற்றுத்திற்காக பாடுபடுவேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.
இதே நிகழ்ச்சிக்கு கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மற்றும்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உள்ளிட்டவர்கள் வீடியோ மூலம் வாழ்த்து
செய்திகளை அனுப்பியுள்ளனர்.
அதில், ‘உலகில் அமைதியை நிலை நாட்ட ஆசிரியர்கள் பெரிதும் உதவுகின்றனர்.
ஆசிரியர்களின் சேவை மேன்மேலும் தொடர வேண்டும்’ என போல் பிரான்சிஸ்
வாழ்த்தியுள்ளார்.
’மாணவர்களை வழிநடத்தி அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை வடிவமைத்து தருவதில்
ஆசிரியர்கள் பெரும் பங்கு கொண்டுள்ளனர்’ என இளவரசர் வில்லியம்
பாராட்டியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...