கிழக்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 246
கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கான்ஸ்டபிள்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை இந்திய அஞ்சல் வில்லையாக அல்லது வங்கி
வரைவோலையாக Financial Advisor & Chief Accounts Officer, East Central
Railway, Hajipur என்ற பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி,
பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து
விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, உடல்
அளவீட்டு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
விண்ணப்பிக்கும் முறை: www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து
தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
IG-Chief Security Commissioner,
East Central Railway, Hajipur,
Pin Code- 844 101, Bihar
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Bihar Police Constable Recruitment 2017
ReplyDeletepstet-application-form-2017
bangalore university results 2017