கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புதன்கிழமை (30)தொடங்கி நடைபெற உள்ளது.
2016-17-ஆம் கல்வியாண்டுக்கான கர்நாடக எஸ்எஸ்எல்சி. பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி, ஏப்.13-ஆம் தேதி வரை நடக்கிறது. கர்நாடகம் முழுவதும் மொத்தம் 8,49,233 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். மாநில அளவில் தேர்வு 13,993 பள்ளிகளில் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இதில் பதற்றமானவை, மிகவும் பதற்றமானவை என கருத்தப்படும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தேர்வு மையங்களை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்வுமையங்களின் 200 மீட்டர் சுற்றளவில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வில் ஒழுங்கீனங்களை தடுக்க மாவட்டம், வட்டஅளவில் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் மொத்தம் 6722 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வுமுறைகேடுகளை முழுமையாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...