கூடுதல் மதிப்பெண்ணுக்காக உடனடி தேர்வு எழுதும் வகையில் பிளஸ் 2 தேர்வில்
எழுதிய விடைகளை அடிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்படும்
என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள்
நாளை மறுநாள் தொடங்குகின்றன.
இம்முறை மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க கூடுதல் பறக்கும் படைகள்
அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தொழிற்கல்விகளில் சேர மாணவர்கள் சிலர் விடைகளை
எழுதிவிட்டு அடிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பதை தேர்வுத்துறை
கவனத்தில் கொண்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு விடைகளை
எழுதிவிட்டு அதை அடிக்கும் மாணவர்கள் 2 பருவ தேர்வுகள் எழுத தடை
விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைகளை அடிப்பதன் மூலம் பெயிலாகி
உடனடி தேர்வு எழுத முடியும் என்பதால் மாணவர்கள் சிலர் அந்த முறையை
கடைபிடித்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்த கூடுதல் மதிப்பெண்
பெறுவதற்கான மதிப்பெண் மேம்பாட்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...