Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாற்காலி கூட இல்லையா? ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு

     'தேர்வு அறையில், மனித உரிமைகளை மீறும் வகையில் உயர் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்' என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
           பிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேட்டை தடுக்க, கிடுக்கிப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில் அவர்களுக்கு நாற்காலி போட வேண்டாம் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனால், ஆசிரியர்கள், பல மணிநேரம் தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

       இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:பொதுத் தேர்வு, காலை, 9:45 மணிக்கு துவங்கினாலும், ஆசிரியர்கள் அதற்கான நடைமுறைகளுக்காக, காலை, 8:30 மணிக்கு, முதன்மை கண்காணிப்பாளர் அறைக்கு வர வேண்டும். அதனால், வீட்டிலிருந்து காலை, 6:30 மணிக்கே புறப்பட்டு வர வேண்டும்.

        தேர்வு முடிந்து விடைத்தாள்களை சோதனையிட்டு, முதன்மை கண்காணிப்பாளரிடம் அவற்றை பட்டியலிட்டு ஒப்படைத்து முடித்து, பிற்பகல், 3:00 மணிக்கு தான் வீட்டுக்கு புறப்பட முடியும்; இதனால், 4:30 மணிக்கு தான் வீட்டுக்கு செல்ல முடிகிறது. இடைப்பட்ட நேரத்தில், தேர்வு அறையில் கூட நாற்காலி இல்லாமல் தொடர்ந்து நின்று கொண்டே இருப்பதால், ஆசிரியர்கள், 10 மணி நேரம் வரை தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

         நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளான ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேர்வறையில், 'டீ, காபி' கூட வழங்கப்படுவதில்லை. இது மனித உரிமைகளுக்கு எதிரானது. எனவே, தேர்வு அறையில் நாற்காலி போடவும், டீ, காபி வழங்கவும் தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.




3 Comments:

  1. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......

    ReplyDelete
  2. தேர்வு அறையில், எந்தஆசிரியர்கள் துாங்கி வழிய மாட்டார்கள். நடப்பது பொதுத் தேர்வுகண்டிக்கத்தக்க வாசகம் இது.

    ReplyDelete
  3. நண்பர் ராஜ்குமார் , தேர்வு நடைமுறையை அறியாதவர். பல ஆண்டுகளாய் இன்னும் சொல்லப்போனால் நான் தேர்வு எழுதிய 1983 முதல் நாற்காலி போடுவது இல்லை. எதோ குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லக்கூடாது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive