Home »
» நெடுந்தூர ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணி வழங்கக்கூடாது ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.
"அதிக தூரமுள்ள ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணி வழங்க கூடாது,' என,
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
மாவட்டத்
தலைவர் மஸ்அமலநாதன், செயலாளர் முத்துப்பாண்டியன், பொருளாளர் குமரேசன்
தேர்தல் ஆணையத்திற்கு னுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஓட்டு உள்ள
ஓட்டுச்சாவடிகளில் தவிர்த்து, அருகில் உள்ள மையங்களில் ஆசிரியர்களுக்கு
தேர்தல் பணி வழங்க வேண்டும். அவர்கள் ஓட்டுச்சாவடி
சென்று வர வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கடந்த தேர்தல்களில்
குளறுபடியால் பல ஆசிரியர்கள் தபால் ஓட்டு அளிக்க முடியவில்லை. இந்த முறை
முன்கூட்டியே தபால் ஓட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது அவர்கள்
பணிபுரியும் ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டளிக்கும் வகையில் பணிச்சான்று வழங்க
வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி,
பாலூட்டும் தாய்மார், வயது முதிர்ந்தோருக்கு தேர்தல் பணியில் விலக்கு
அளிக்க வேண்டும். கடந்த தேர்தலில் ஆசிரியர்களை அதிகாரிகள் தரக்குறைவாக
நடத்தியதால் பிரச்னை ஏற்பட்டது. அதனை தவிர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட
வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தி
தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...