பொதுத்தேர்வில் பணி அமர்த்தப்பட்டது குறித்து, வாட்ஸ் ஆப் மூலம் அவதூறு
பரப்பியதாக, மூன்று ஆசிரியர்கள் மீது, ஆசிரியை ஒருவர் புகார்
கொடுத்துள்ளார்.
இந்த புகார், கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை, 6.30 மணிக்கு ஆசிரியை பிரியா, ஆசிரியர்கள் இளங்கோ, மகேந்திரன், ஜெகதீஸ் ஆகியோர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். அவர்களுடன் இருதரப்பை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். முதலில் மகளிர் இன்ஸ்பெக்டர் ராணி, ஆசிரியை பிரியா, ஆசிரியர்கள் இளங்கோ உள்ளிட்ட மூன்று பேரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தி னார்.
இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ கூறியதாவது: பொதுத்தேர்வு காலங்களில், அரசின் விதிமுறைகள் கரூர் சி.இ.ஓ., அலுவலகத்தில் மீறப்படுகிறது என்று, ஏற்கனவே கூறியிருந்தோம். அரசு விதிமுறைப்படி தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். சிலர் தேவையில்லாமல் ஆசிரியைகளை தூண்டி விட்டு புகார் கொடுத்துள்ளனர். வாட்ஸ் ஆப் மூலம் யாரையும் பெயரை குறிப்பிட்டு தவறாகவோ, அவதூறு பேசியோ அனுப்பவில்லை. விதிமுறைகள் மீறல் குறித்து மட்டுமே தகவல் பரிமாறப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...