சர்வதேச கால்பந்து போட்டி வீரர்களுக்கான தேர்வில் ராமநாதபுரம் மாணவர் 4ம் கட்ட தேர்வுக்கு முன்னேறினார்.
இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச கால்பந்து போட்டி 'பிபா' சார்பில் அடுத்தாண்டு நடக்கிறது. இதற்கு தகுதியான வீரர்களை இந்திய விளையாட்டு ஆணையம், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தேர்வு செய்கிறது.
இதில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர் சேது பூபதி, சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் தாஜூதீன் தேர்ச்சி அடைந்தனர்.திருச்சியில் கடந்த வாரம் நடந்த 3ம் கட்ட தேர்வில் இருவரும் கலந்து கொண்டனர். இதில் சேது பூபதி தேர்ச்சி பெற்று 4ம் கட்ட தேர்வுக்கு முன்னேறினார்.சேது பூபதி கூறுகையில்,'ஆறாம் வகுப்பில் இருந்து கால் பந்து விளையாடி வருகிறேன். 2014ல் சென்னையில் நடந்த 14 வயதிற்குட்பட்டோர் கால்பந்து முகாமில் பங்கேற்றேன். சர்வதேச போட்டிக்கு 4 ம் கட்ட தகுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...