பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையங்களை மாற்றக்கோரி முதுகலை
பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாளை (3ம் தேதி) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நடைபெறுகிறது. இதுகுறித்து அச்சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பாரி
விடுத்துள்ள அறிக்கை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு
உழைப்பூதியத்தை இரட்டிப்பாக்கி தரவேண்டும். நடப்பு ஆண்டில் சங்ககிரி கல்வி
மாவட்டத்திற்கு விடைத்தாள் திருத்தும் மையத்தை கருப்பூர் எஸ்எஸ்ஆர்எம்
மேல்நிலைப்பள்ளியிலும், ஆத்தூர் தாகூர் மேல்நிலைப்பள்ளியிலும்
அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகள் ஆசிரியர்கள் எளிதில் வந்து செல்லும்
வகையில் இல்லை. எனவே, ஆசிரியர்கள் ஓரளவு எளிதில் பயணம் செய்யும் வகையில்
மேச்சேரி, ஆத்தூர் பகுதிகளுக்கு மையங்களை உடனடியாக மாற்றம் செய்யவேண்டும்.
விடைத்தாள் மையங்களை தேர்வு செய்யும் முன்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின்
ஆலோசனைகளை பெறவேண்டும்.ஆசிரியர்கள் அவரவர் விரும்பும் விடைத்தாள்
திருத்தும் மையங்களை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கவேண்டும். அனைத்து தேர்வு
பணிகளிலும் பணிமூப்பு முறையாக பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை (3ம் தேதி) மாலை 5 மணிக்கு சேலம்
நாட்டாண்மை கழக கட்டிடம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில்,
ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் பாரி
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...