தமிழகம்
முழுவதும், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள, 'இ - சேவை' மையங்களில்,
கூடுதல் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:பிறப்பு மற்றும் இறப்பு
சான்றிதழ் பெறலாம்மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுவை,
'ஆன்லைனில்' பதிவு செய்யும் வசதியும், ஏற்கனவே பதிவு செய்த மனுவின்,
தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுஉணவு
மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தொடர்பான சேவைகள், பொது வினியோக
திட்டம் தொடர்பான புகார்களை, தனியாகவும், பொது வினியோகத் திட்டம் அல்லாத
புகார்களை தனியாகவும், புகார் மனு பதிவு செய்யும் வசதி, பதிவு செய்துள்ள
மனுவின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுபயிற்சி ஓட்டுனர் உரிமம் பெறவும், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு, நேர்காணலுக்கான தேதி தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...