ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறாததால் வேடசந்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஊதிய முரண்பாடுகளை களைய கோரியும், கோவிலூர் பள்ளி ஆசிரியர் செந்தில்குமாரின் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்த கோரியும், மாவட்ட அளவிலான காத்திருப்பு போராட்டம் மார்ச் 9ல் திண்டுக்கல்லில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
மாவட்ட கல்வி அதிகாரி வேடசந்தூர் தொடக்க கல்வி அலுவலகத்தின் மூலம் பள்ளி ஆசிரியர் பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.இதன்பின், உதவி துவக்க கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டுபிரச்னையை தீர்க்க கோரினர்.
மாவட்ட அதிகாரியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என உதவி கல்வி அலுவலகத்தில் தெரிவித்தனர். இதனால் நேற்று மாலை அங்கு ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். இரவு 8 மணி வரை அலுவலர்கள் வெளியே வரஇயலவில்லை.இதில் போராட்டத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் அமல்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், வேடசந்தூர் வட்டார தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...