இந்த வார இறுதியில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மறுத்து விட்டார்.தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அநேகமாக இந்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகக் கூடும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள்தெரிவித்தனர். தேதி அறிவித்தவுடனேயே, மாநிலத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்து விடும் என அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...