இந்தியா
என் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற நாடு என்று ஐ.நா. பொதுச் செயலர்
பான்-கீ-மூன் கூறியுள்ளார். தென்கொரியா என்ற சிறிய நாட்டில் பிறந்த நான்
எனது முதல்
பணியை இந்தியாவில் தான் துவங்கினேன்.
தலைநகர் தில்லியில் நான் தூதராக
பணியாற்றிய காலம் பொற்காலம், என்றுமே மறக்க முடியாத அனுபவம். என்று
லிங்ட்இன்(LinkedIn) என்ற வலைதளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
தொழில் ரீதியாக ஒரு வலுவான உறவு ஏற்பட்டது இந்தியாவில்
தான். இந்தியா மற்றும் தெற்கு ஆசியா என் இதயத்தில் ஒரு வலுவான இடத்தை
பிடித்த நாடுகள்.மேலும் எனது இரண்டாவது மகன் இந்தியாவில் தான்
பிறந்தான். எனது மகள் சியோன் யோங்க் ஒரு இந்தியரைத் தான் திருமணம் செய்து
கொண்டார். எனக்கு பிடித்த கொரியன்-இந்திய கூட்டு முயற்சியில் என் பேத்தி
குடும்பத்தில் ஒரு அங்கமாக இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, என்றுமே
நீங்காத சிறப்பான ஓர் இடத்தை பிடித்த நாடு "இந்தியா" என்று அவர்
கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...