பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக பாடங்களுக்கு 'கீ
ஆன்சர்' தயாரிக்கும் குழுவில் மதுரை ஆசிரியர்கள் இடம்
பெற்றுள்ளனர்.
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவதற்குள் பத்தாம்
வகுப்புதேர்வும் துவங்கி விட்டன. மொழிப் பாட தேர்வுகள் முடிந்த பின்,
விடைத்தாள் திருத்தும் பணிகளும் அடுத்தடுத்து துவங்கின.பத்தாம் வகுப்பில்
தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் 'கீ ஆன்சர்' தயாரிப்பில்,மதுரை ஆசிரியர்
குழு ஏற்கனவே இடம் பெற்றது.
தற்போது பிளஸ் 2 தேர்வுகளுக்கான 'கீ ஆன்சர்' தயாரிக்க, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு, மதுரை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் மூன்று அல்லது நான்கு மாவட்டங்களில் பாடவாரியாக ஆசிரியர்களை தேர்வு செய்து 'கீ ஆன்சர்' தயாரிக்கப்படும். நான்கு வகையான 'கீ ஆன்சர்'களை ஒப்பிட்டு இறுதி 'கீ ஆன்சர்' முடிவு செய்து, அதன் அடிப்படையில் விடைத்தாள் திருத்தப்படும். இந்தாண்டு அதிக பாடங்களுக்கு 'கீ ஆன்சர்' தயாரிக்க மதுரை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்," என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...