Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Part Time Teachers - 'பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு இல்லை'.

      அரசு பள்ளிகளில், கணினி, கைவினை, கலை, ஓவியம், இசை என, பல்வேறு வகை சிறப்பு பாடப்பிரிவுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 

        இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கடந்த வாரம் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, சங்க பிரதிநிதிகளை அழைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேச்சு நடத்தினார்.அப்போது, 'தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும்; அதற்கு முன், 7,000 ரூபாய் சம்பளத்தை, 12 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; பள்ளி வேலை நாட்களை உயர்த்த வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பதில் அளித்தபோது, 'நீங்கள் மத்திய அரசின் சிறப்பு திட்டத்தில் பணியாற்றுவதால், உங்களை நிரந்தரம் செய்யும் திட்டம், தற்போதைக்கு இல்லை; ஊதிய உயர்வு குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, டில்லி சென்று, மத்திய அரசு அதிகாரிகளிடம் பேசிய பின் முடிவு செய்யப்படும்' என, கூறியுள்ளார்




22 Comments:

  1. இ்த சம்பளத்த வச்சி நாங்க என்ன பன்றது.எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துடுங்க நாங்க வேற வ

    ReplyDelete
  2. pl yanga govtment kora soluringa............ intha job name part time tha ........ part time therinsu nenga post ku yan poringa...........

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோசம் சகோதரா! 16,500 குடும்பங்களோட சாபத்தை வாங்கிகட்டிக்காதீங்க! நல்லா இருங்க!

      Delete
  3. part time nalum orutharuku minimum 3 school la vela oru schlku 5000 nalum 3 schlku 15000 kidaikumnu than sir iruka velaya vittu vanthome intha government emathiduchu sir

    ReplyDelete
  4. Second day fasting is going on for TET posting சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் [SPL TET] தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்கக்கோரி 1.3.16 முதல் தொடர் போராட்டம் சென்னை DPI வளாகத்தில் நடைபெற உள்ளது.எனவே SPL TET ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறாத அனைத்துமாற்றுத்திறானாளிகளும்[ORTHO & BLIND] போரட்டத்தில் பங்கு பெறுவீர். பணி நியமனம் பெறுவீர்.தொடர்புக்கு தொடர்புக்கு நாகராஜ் சிவகங்கை
    8344593334
    பாலசந்தர் விருதுநகர்
    9786064345
    அய்யனார் சேலம்
    8144762956
    அருண்குமார் நாமக்கல்
    9965588748
    சக்தி தர்மபுரி 8760016478

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியில் கணினி, உடற் கல்வி மற்றும் ஓவியம் மிக முக்கிய அங்கமாக திகழ்கிறது.
    நான்கு ஆண்டுகள் சிறபான கல்வி பகுதி நேர ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

    சாதணைகள்
    1.உடற் கல்வி பகுதி நேர ஆசிரியர்கள்
    விளையாட்டு‍ போட்டியில் மாநில அளவில் மாணவர்களை வெற்றி பெற செய்து பல பகுதி நேர அசிரியர்கள் சாதணை செய்து உள்ளனர்.

    2.கணினி பகுதி நேர ஆசிரியர்கள்
    இலட்ச கணக்கான கிராமம் மற்றும் நகரபுற மாணவர்களக்கு கணினி பயிற்சி அளித்து வருகின்றனர், நமது பகுதி நேர ஆசிரியர்கள்.

    3.ஓவிய பகுதி நேர ஆசிரியர்கள்
    இலட்ச கணக்கான கிராமம் மற்றும் நகரபுற மாணவர்களக்கு .ஓவிய பயிற்சி அளித்து, பல ஒவிய போட்டிகளில் மாணவர்களை வெற்றி பெற செய்து உள்ளனர்,

    மாணவர்கள் நலன் கருதி பகுதி நேர ஆசிரியர்களை அரசு பணிநிரந்திரம் செய்ய அரசிடம் கோரிக்கை வைக்குறோம்

    ReplyDelete
  7. பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பு உள்ளது.
    அதாவது SSA திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் அரசு நினைத்தால் பள்ளி கல்வி துறைக்கு மாற்றி பணி நிரந்திரம் செய்ய முடியும்.
    போராடினால் வெற்றி உண்டு

    ReplyDelete
  8. .கணினி பகுதி நேர ஆசிரியர்கள்
    இலட்ச கணக்கான கிராமம் மற்றும் நகரபுற மாணவர்களக்கு கணினி பயிற்சி அளித்து வருகின்றனர், பகுதி நேர ஆசிரியர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஏங்க கம்யூட்டரே இல்ல, அப்புறம் எப்படி இலட்சக்கணக்கான கிராம மாணவர்களுக்கு கம்யூட்டர் பயிற்சி கொடுப்பீங்க?
      பெரிய வித்தக்காரரா இருப்பீங்க போலருக்கு? ஆமாம் பகுதி நேர சிறப்பாசிரியர்களில் 4,500 பேர் கணிணி ஆசிரிர்கள்தான், இவர்கள் ஒன்றுமே மாணவர்களுக்க சொல்லிக் கொடுக்கவில்லையா?
      அப்ப அந்த 4,500 பகுதிநேர கணிணி ஆசிரியர்மேல வழக்கு போடுங்க.

      Delete
    2. முதலில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று அங்கு கணிணி இருக்கிறதா இ்ல்லையா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு பிறகு எங்களை குறை சொல்லுங்கள். இப்பொழுது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கணிணிகள் வழங்கப்பட்டுள்ளது. நேரில் பார்க்காமல் வாய் இருக்கிறதென்று குறை கூறக்கூடாது.

      Delete
  9. 1) வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும்தான் வேலை என்றீர்கள்! அது எந்த பள்ளியிலும் கடைபிடிக்கப்படுவதில்லை!

    2) மூன்று பள்ளிவரை வேலை தருவதாக சொன்னீர்கள், அதை செய்தீர்களா?

    3) மே மாதம் சம்பளம் இல்லை! ஆனால், விலையில்லா புத்தகம், நோட்டு, எடுத்துவருதல், பள்ளி பாரமரிப்பு பணி, இதர பணிகள், அரசாணையில் இல்லாத பணிகளை ஏன் திணிக்கிறீர்கள்?

    4) நாங்க போட்டுக்கிறதுக்கு கோட்டு சூட்டு கேட்கவில்லை! மானத்த மறைக்க ஒரு துண்டாவது கொடுங்க!

    5) எங்களுக்கு கொடுத்த வேலையோ 'பகுதிநேர சிறப்பாசிரியர்' ஆனால் நாங்கள் செய்வதோ 'எடுபிடி' வேலைகள்! ப

    6) மிருகங்களுக்கு கூட மிருகவதைச் சட்டம் இருக்கு!
    16,500 குடும்பம் மனிதன் இல்லையா?

    7) கொத்தடிமைகளா நம்மை இன்னும் எத்தனை காலம்தான் வைத்திருப்பீர்கள்? பிறந்த மண்ணிலேயே அடிமைகளாக்கப்பட்டோம்!

    ReplyDelete
  10. அனைத்து பகுதி நேர அசிரியர்களையம் உடனடியாக எடுத்துவிட்டு. தகுதி அடிப்படையில் நியமனம் செய்யவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ராஜா மிகவும் நொந்து போய் விட்டார் போலருக்கு. அடுத்தவன் குடும்பத்து வாயில மண்ண போடுங்க. நீங்க நல்லா(?????!!!!) வருவீங்க ராஜாதி ராஜா!!!

      Delete
  11. பகுதி நேர அசிரியர்கள் எந்த அடிப்படையில் நியமனம் செய்தார்கள், பணமா?, கல்வித்த்குதியா?

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவுலதான இருக்கீங்க? தயவு செய்து.....
      தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், முதல்வர், பிரதமர், கல்வி அமைச்சர்களிடம் கேள்வி கேட்டு தெளிவு பெறுங்க.

      Delete
  12. பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்து துரத்த வேண்டும்.

    (பின்குறிப்பு)
    இந்த டிஸ்மிஸ்க்கு பிரகாவது அவர்கள் தங்களது குடும்பத்திற்காக வாழட்டும்!

    தனது குடும்பத்திற்காகவாவது உருப்படியான வேலையை தேடிக் கொள்ளட்டும்!

    சிந்தித்து செயல்பட பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்!

    ReplyDelete
  13. 1)தகுதி,
    2)திறமை,
    3)நேர்காணல் தேர்வு,
    4)சீனியாரிட்டி,
    5)இட ஒதுக்கீடு,
    5)மற்றும் இதர தகுதிகள்
    அடிப்படையில் பகதிநேர சிறப்பாசிரியர்களை தேர்தெடுத்ததாக சொல்லும் அரசு ஏன் அவர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது?

    ReplyDelete
  14. முதல்வர் நினைத்தால், மனது வைத்தால் மட்டுமே பணிநிரந்தரத்திற்கு வாய்ப்பு.
    அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் கூட தலையிடாது.
    பகுதிநேர சிறப்பாசிரியர்களின் தலைவிதி இனி முதல்வர் கையில்.

    ReplyDelete
  15. முதலில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று அங்கு கணிணி இருக்கிறதா இ்ல்லையா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு பிறகு எங்களை குறை சொல்லுங்கள். இப்பொழுது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கணிணிகள் வழங்கப்பட்டுள்ளது. நேரில் பார்க்காமல் வாய் இருக்கிறதென்று குறை கூறக்கூடாது.

    ReplyDelete
  16. உடனே பணி நிரந்தரம் செய்தால் இப்போதைய அரசுக்கு ஓட்டு. இல்லையென்றால் செய்வதாக உறுதியளிப்பவருக்கே ஓட்டு என பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் முடிவு செய்ய வேண்டும். உங்கள் வாக்கு ! உங்கள் வாழ்வு !

    ReplyDelete
  17. கணினி பகுதி நேர ஆசிரியர்கள் உங்களை குறை சொல்லை வில்லை? முதலில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு உயர் /மேல் பள்ளிக்குச் சென்று அங்கு உள்ள அனைத்து கணிணி இயங்குகிறதா?.கம்ப்யூட்டர் இயங்குகிறதா???...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive