வரும் 12-ம் தேதி முதல் தொடக்கக் கல்வி பட்டய விடைத்தாள் ஒளிநகல்களை
பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாவட்ட ஆசிரியர்
பயிற்சி நிறுவன முதல்வர் சோமசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2015-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தொடக்க கல்வி பட்டயத் தேர்வின் விடைத்தாள் ஒளிநகல் கோரி கடந்த பிப்.16-ம் தேதி முதல் பிப்.20-ம் தேதி வரை விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது.அவ்வாறு விண்ணப்பித்த தேர்வர்கள் விடைத்தாளின் ஒளிநகல்களை 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை scan.tndge.in என்ற இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.அதனை தொடர்ந்து விடைத்தாள்களின் ஒளிநகல்கள் பெற்ற மாணவ,மாணவிகள் விருப்பம் இருப்பின் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு www.tndge.in என்ற இணைய தளத்தில்உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை வரும் 17-ம் தேதிமுதல் 19-ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகத் செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விடைத்தாளின் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒருபாடத்திற்கு ரூ.250ம் விடைத்தாளின் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.505ம் செலுத்த வேண்டும். தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...