அரியலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான நேர்முகத் தேர்வு அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அப்பணிக்கு தகுதி உடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்கள் (சுய சான்றொப்பத்துடன்) இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் நேர்காணலுக்கு இந்நீதிமன்ற இணையதள வலைத்தளத்தின் மூலம்அழைக்கப்படுவோர் மட்டும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள முடியும்.
பதவி:சுருக்கெழுத்து தட்டச்சர் (தற்காலிகமானது)
காலியிடங்கள்:03
சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800 - (ஊதிய கட்டு (PB-I) (மாதம் ஒன்றுக்கு)
வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ளஅரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.
தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் - தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை மற்றும் இரண்டிலும் இளநிலை, தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:06.04.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:முதன்மை மாவட்ட நீதிபதி,முதன்மை மாவட்ட நீதிமன்றம்,அரியலூர் மாவட்டம்.காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டு பரிசீலிக்கப்படமாட்டாது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Steno%20Typist.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...