இந்திய குழந்தைகளை நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியில் இருந்தும்
தத்து எடுப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ள
நிலை யில், இந்த சட்டத்தின் கீழ் விதி முறைகளை வகுக்க வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் தத்து எடுப்பது அல்லது கொடுப்பது தொடர்பான புகார்கள் குறித்து
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று மறுத்த நீதிபதிகள், ஏதேனும்
குறிப்பிட்ட புகாருடன் மனுதாரர் வந்தால் அதை விசாரிப்பது குறித்து சிபிஐ
பரிசீலிக்கலாம் என்றனர்.
குழந்தைகள் தத்து எடுக்கப்படுவதை சிறார் நீதிச் சட்டம் - 2002-ன் பிரிவு
2(ஏஏ) வரையறுக்கிறது. வழக்கமான பெற்றோர் குழந்தைகளுக்கு உரிய அனைத்து
உரிமைகள் மற்றும் பொறுப்புகளை தத்து எடுக்கும் பெற்றோர் மற்றும்
குழந்தைகளுக்கு இந்தப் பிரிவு அளிக்கிறது.
தத்து எடுக்கும் பெற்றோர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்தப் பிரிவு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...