அரசுப் பணியில் ஓய்வு பெற்றாலும் உடல்நலம் அனுமதிக்கும் பட்சத்தில் தங்களைச் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து கல்விப் பணியாற்றுங்கள் என அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் சார்பில் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பணி நிறைவுப் பாராட்டு விழா அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு காவனூர் நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.சர்புன்னிசா தலைமை வகித்தார். விழாவில் பணிநிறைவு பெற்றவர்களைப் பாராட்டி அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் பேசியதாவது:பணிநிறைவு பெறும் ஆசிரியர்கள் பணிக்காலத்துக்கு பிறகு தங்களது உடல்நலம் அனுமதிக்கும் பட்சத்தில் தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவிகளை முன்னேற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.பணி நிறைவு பெற்று இருக்கும் ஆசிரியர்களின் அனுபவம் என்பது மிகவும் முக்கியமானது. அதை எதிர்கால சந்ததியினர்பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பயிற்சி அறிவை விட அனுபவ அறிவு மிகவும் முக்கியமானது. எனவே தொடர்ந்து உங்களது பகுதியில் கல்விப் பணியாற்றுங்கள் என்றார்.
இதில் பணி ஓய்வுபெற்ற எஃகுநகர் பள்ளித் தலைமை ஆசிரியர் வி.வடிவேல், ஆணைப்பாக்கம் டிஇஎல்சி நிதியுதவி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.ஸ்டெல்லா உள்ளிட்ட எட்டு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களைப் பாராட்டி பரிசுகளை டி.ஆர்.சுப்பிரமணியம் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில்சிறப்பாக நடன நிகழ்ச்சி நடத்திய காந்திநகர் நகராட்சி பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அரக்கோணம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பே.சீ.ரமணன், மேலும் சுதாபிரேம்குமார், எபிநேசர், தேவராஜ், சிவகுமார், பிரின்ஸ்தேவ ஆசீர்வாதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...