Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது: 8.49 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

       கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 
 
              இதில் மொத்தம் 8.49 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.இது குறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சத்தியமூர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியது: 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான கர்நாடக எஸ்எஸ்எல். பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி, ஏப்.13-ஆம் தேதி வரை நடக்கிறது.


கர்நாடகம் முழுவதும் மொத்தம் 8,49,233 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் மாணவர்கள் 4,50,640, மாணவிகள் 3,98,593 பேர் அடங்குவர். பள்ளி தேர்வர்கள் 7,92,707, தனித்தேர்வர்கள் 20,225, மறுதேர்வர்கள் 36,301 பேர். தேர்வில் பங்கேற்க மொத்தம்13,993 பள்ளிகளில் இருந்துவிண்ணப்பங்கள் வந்துள்ளன.இவற்றில் அரசுப்பள்ளிகள் 5117, அரசுமானியம்பெறும் பள்ளிகள் 3300, அரசு மானியம்பெறாத பள்ளிகள் 5576 ஆகும். 34 கல்வி மாவட்டங்களில் 3082 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில்பதற்றமானவை 111, மிகவும் பதற்றமானவை 27 மையங்களாகும். 1188 தேர்வுமையங்களில் தேர்வு நடவடிக்கையை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாள்களில் தேர்வுமையங்களில் இருந்து 200 மீட்டர் சுற்றளவில் 144தடையுத்தரவு அமல்படுத்தப்படும். தேர்வுமையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஆள்நடமாட்டம் முழுமையாக தடை செய்யப்படும். அதேபோல, தேர்வுமையங்களுக்கு அருகே அமைந்துள்ள நகலகங்கள் மூடுவதற்குநடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்ட ஆட்சித்தலைவரின் கண்காணிப்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் தவிர அரசுத்துறைகளின் அதிகாரிகள் அடங்கியபறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படை தேர்வில் ஒழுங்கீனங்கள் நடக்காமல்தடுக்கும் பணியில் ஈடுபடும். மாவட்டம், வட்டஅளவில் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் மொத்தம் 6722 பேர் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள். தேர்வுப்பணிகளை பார்வையிடுவதற்கு அமைக்கப்படும் பறக்கும்படையில் இடம்பெறும் அதிகாரிகளை சுழற்சிமுறையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள். தேர்வுமுறைகேடுகளை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேர்வில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் மாணவர்கள், அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஆசிரியர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். வினாத்தாள்கள் கசியாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி யாராவது வினாத்தாள் கசிய வாய்ப்பளித்தால் அல்லது உதவினால் அப்படிப்பட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் யாராக இருந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுமையங்களில் செல்லிடப்பேசிகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தேர்வு ஊழியர்கள் யாராக இருந்தாலும் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தக்கூடாது.விடைத்தாள் திருத்தும்பணி ஏப்.18-ஆம் தேதிமுதல் தொடங்கும். இதற்காக மாநிலம் முழுவதும் 218 மதிப்பீட்டுமையங்கள் அமைக்கப்படும். தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 080-23310075,23310076 ஆகிய தொலைபேசி எண்களில் அணுகலாம் என்றார் அவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive