சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று
(செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணியில் இருந்து அடுத்த 14 மணிநேரம் வரை
திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை மூடப்பட்டிருக்கும் என திருப்பதி-திருமலா
தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நேற்றிலிருந்து அங்கு கூடியுள்ள பக்தர்கள் அறைகளுக்குள்
வரிசையாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். சூரிய கிரணம் முடிந்த பின்னர்,
சம்பிரதாயப் பரிகாரங்களுக்கு பின்னர் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள்
அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் : திருச்செந்தூர் கோவில் நாளை 3 மணிக்கு நடைதிறப்பு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாளை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
இது குறித்து திருக்கோவில் இணை ஆணையர் தா.வரதராஜன்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : நாளை புதன்கிழமை (மார்ச். 9) அதிகாலை
4.50 மணி முதல் காலை 6.50 மணி வரை சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இதை
முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்
முடிந்தவுடன் திருக்கோவில் நடைதிருக்காப்பிடப்படுகிறது. மீண்டும் காலை 7.15
மணிக்கு திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு, தீர்த்தவாரி மற்றும் கலச
பூஜையாகிறது. அதன்பின் உதயமார்த்தாண்ட பூஜை மற்றும் மற்ற கால பூஜைகள்
தொடர்ந்து நடைபெறும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...