விழுப்புரம் அருகே உணவு
இடைவேளையின் போது, பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் 7 ஆம் வகுப்பு
மாணவன் சக மாணவனால் கொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அம்மைககார அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
இன்று பள்ளி வந்த பாலமுருகனுக்கும் சக மாணவர் ஒருவருக்கும் உணவு இடைவேளையின் போது, பெஞ்சில் அமர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மாணவர் ஒருவர் பாலமுருகனை கீழே தள்ளியுள்ளார்.மர பெஞ்சின் மீது விழுந்த பாலமுருகனுக்கு பலத்த காயமேற்பட்டுள்ளது. இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். எனினும், செல்லும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டார்.
இதுகுறித்து சின்ன சேலம் போலீஸார் வழக்குப் பதிந்து, பாலமுருகனை தள்ளிவிட்ட சக மாணவரை பிடித்து சிறுவர் நீதிமன்றத்தில் ஒப்படைந்தனர். அவர் பின்னர் கடலூரில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

Morning 10am nadantha matter..neenga lunch timenu podaringa..
ReplyDelete