தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் ஒருவரது உயிர் அல்லது சுதந்திரம்
தொடர்பாக தகவல் கோரப்பட்டால் அது குறித்து 48 மணி நேரத்தில் தகவல் தரப்பட
வேண்டும் என்று மக்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
இது
குறித்து மக்களவையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.என்.
ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ஊழியர் நலன், பொது குறைதீர்
மற்றும் பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர
சிங் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கோரப்படும் கேள்விகளுக்கு, விண்ணப்ப மனு பெறப்பட்ட 30 நாள்களுக்குள் தகவல் அலுவலர் உரிய தகவலையோ அல்லது நிராகரிப்பதற்கான காரணத்தையோ கட்டாயம் தெரிவித்தாக வேண்டும்.எனினும், ஒருவரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்களைக் கோரி வரும் விண்ணப்பம் வந்தால் அது கிடைத்த நாளில் இருந்து 48 மணி நேரத்திற்குள் உரிய பதிலை அளிக்க வேண்டும். தலைமை த் தகவல் ஆணையர் உள்பட ஒவ்வொரு தகவல் ஆணையரும் ஒவ்வோர் ஆண்டும் 3,200 மேல்முறையீடுகள் அல்லது புகார்கள் மீது நடவடிக்கை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் 2011 மார்ச் 22ஆம் தேதி முடிவு செய்தது. 2015-ஆம் ஆண்டில் மொத்தம் 27,922 மேல்முறையீடுகள் அல்லது புகார்கள் பைசல் செய்யப்பட்டன என்று அமைச்சர் கூறியுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...