இம்மாத இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட
உள்ளது. இதனால் ஏடிஎம் மையங்களில் முன்பே தேவையான பணம் எடுத்து வைத்துக்
கொள்ளுதல் மற்றும் கணக்கு வழக்குகளை பார்த்து, திட்டமிட்டு செயல்பட்டால்,
பாதிப்பை தவிர்க்க முடியும்.
மார்ச் 24ம் தேதி ஹோலி பண்டிகை, மார்ச் 25ம் தேதி புனித வெள்ளி, மார்ச் 26
நான்காவது சனிக்கிழமை (மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை
வங்கிகளுக்கு விடுமுறை என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது). மார்ச்
27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை. ஆக தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக
வங்கிகள் மூடப்பட உள்ளன. இதனால், வங்கிகளில் பணம் செலுத்துவது, பண
பரிவர்த்தனை, ஏடிஎம்.,க்களில் பணம் எடுப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில்
சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏடிஎம்.,களில் பணம் எடுப்பவர்கள் முன்னரே போதிய அளவு பணம் எடுத்து வைத்துக்
கொள்வதன் மூலம் சிரமத்தை தவிர்க்கலாம். தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில்
உள்ளது என்பது கவனத்தில் கொண்டும் மக்கள் பணத்தை கையிருப்பு வைத்துக்
கொள்வது நலமாக இருக்கும்.
தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களுக்கு செல்வோர் முன்னரே திட்டமிட்டு, பயண
அட்டவணையை வகுத்தால் ரயில் டிக்கெட் கிடைக்காமல் அல்லது காத்திருப்பு
பட்டியலில் வைப்பது போன்ற கடைசி நேர அல்லல்களை தவிர்க்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...