Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எஸ்.ஆர்.எம். பொறியியல் நுழைவுத் தேர்வு: மார்ச் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கு (எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 150 நகரங்களில் ஏப்ரல் 19 முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதாலும் மாணவர், பெற்றோர் வலியுறுத்தியதாலும் இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப நாள் மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தேர்வுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வெழுதும் நாளுக்கான பதிவு மார்ச் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் மே 1-ஆம் தேதி வெளியிடப்படும். 


இதே போல் உடல் நல அறிவியல் ("ஹெல்த் சயின்ஸஸ்') பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, எம்.டெக் படிப்புக்கான எஸ்.ஆர்.எம்.ஜி.இ.இ.டி. தேர்வு, எம்.பி.ஏ. படிப்புக்கான எஸ்.ஆர்.எம். "கேட்' நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கும் நாள் மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive