தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மைய பணிக்கு அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வை, தருமபுரி மாவட்டத்தில் 57 மையங்களில் 146 பள்ளிகளைச்
சேர்ந்த 22,416 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இத்தேர்வுக்காண ஏற்பாடுகள்
நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுத் தேர்வுக்கு 10 வினாத்தாள் கட்டுக்
காப்பாளர்கள், 10 கூடுதல் வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 57 முதன்மைக்
கண்காணிப்பாளர்கள்,
9 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 57 துறை
அலுவலர்கள், 23 வழித்தட அலுவலர்கள், 110 பறக்கும் படை உறுப்பினர்கள்
மற்றும் 1,200 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில்,
தருமபுரி மையத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி குலுக்கல்
மூலம் மையங்கள் தேர்வு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். அறைக்
கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் நல்லம்பள்ளி,
பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பி.மல்லாபுரம் ஆகிய மையங்களில் கல்வித் துறை
அலுவலர்கள் மேற்பார்வையில் குலுக்கல் முறையில் தங்களுக்கான தேர்வு
மையங்களைத் தேர்வு செய்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...