பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளும் சிவகங்கை மாவட்ட
முதுநிலை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் மையத்தைத் தேர்ந்தெடுக்க
வாய்ப்பளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்
கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில தனியார் பள்ளிச் செயலர் பி.சுப்பிரமணியன்
கூறியதாவது: மார்ச் 14ஆம் தேதி முதல் பிளஸ் 2 மொழிப்பாட விடைத்தாள்
திருத்தும் பணியும், அதைத் தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான விடைத்தாள்
திருத்தும் பணியும் சிவகங்கை, காரைக்குடியில் நடைபெறவுள்ளது. இதில்
முதுநிலை ஆசிரியர்கள் தங்கள் விருப்ப மையத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்க
வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை, தென்காசி மற்றும் வள்ளியூர்
ஆகிய மூன்று இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் செயல்பட உள்ளன.
இந்த மாவட் டத்தில் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் எந்த மையத்திலும்
விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே
போன்று சிவகங்கை மாவட்டத்திலும் தேர்வுத் துறை இயக்ககமும், சிவகங்கை மாவட்ட
கல்வித் துறையும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...