Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 முக்கிய தேர்வுகளை கண்காணிக்க பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படை

          பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளை தீவிரமாக கண்காணிக்க அண்ணா பல் கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4-ம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.

       4-வது நாளான நேற்று ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வுநடந் தது. ஆங்கிலம் முதல்தாள் போல, 2-ம் தாள் தேர்வும் எளிதாக இருந்த தாக பல மாணவ, மாணவிகள் கூறினர்.இந்நிலையில், மருத்துவம், பொறியியல், விவசாயம், கால் நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு சேர கணக்கில் கொள்ளப்படும் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் 14-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கு கின்றன. பொறியியல் படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்ணும், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்பு களுக்கு உயிரியல்,இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்ணும் பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த ஆண்டு பிளஸ் 2 முக்கிய தேர்வுகளை கண்காணிக்க அண்ணா பல்கலைக்கழக பேராசிரி யர்கள் 33 பேர் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மட்டும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். யார் யார் எந்தெந்த மாவட்டத்துக்கு செல்கின்றனர் என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்படும் என்று அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive